Music

சங்கீதம் - 4

நமது இந்தியாவின் சரித்திரம் - வட – தென் - கர்நாடக - தெலுங்கு – தமிழ் தேசங்கள் என – எதை படித்தாலும், அதில் பக்தியுடன் கூடிய அழகான வரலாறுகளும் - பாடல்களும் நிறைய உள்ளன. பாடல்களை பக்தி இலக்கியம் என்றே கூறலாம்.
பாடல்கள் மட்டுமே என்றும் குன்றாத இளமையுடன், இனிமையுடன் உள்ளன.
கோவில்கள் - குழந்தைகள் - பாடல்கள் (இசை) – உண்ணும் உணவு இவைகள் மட்டுமே மனிதனுக்கு என்றும் அலுப்பதில்லை.
இறைவன் எந்த அளவுக்கு எளியவன் . . .?  
தம்மைப் பாடி பக்தி செய்யும் எளிய பக்தனுக்காக, தன்னைப் பாடாமல் ஊரைப்பற்றி பாடுகிறாரே என சினம் கொண்ட மன்னனின் ஆணைப்படி ஊரைவிட்டு, வெளியேறும்போது – திருமழிசை ஆழ்வார், “பூங்கச்சி மணிவண்ணா, நீ கிடக்க வேண்டி, துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன், நீயுமுன்றன், பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்”, என, திருக்கோயிலில், பாம்பணை மேல் பள்ளி கொண்டிருந்த பெருமாளையும் கூப்பிட, பெருமாளும் பரவசத்துடன் பாம்பணை விட்டு, ஆழ்வாரோடும், கணிகண்ணனோடும் காஞ்சியை விட்டு வெளியேறினாராம் - அவ்வளவு எளியவன் !! 
பாடல்களுக்கும், இசைக்கும், மகிழ்ந்து, நெகிழ்ந்து போகிறவன் பரமன்.
மிருகங்களில், மானும், மயிலும் பாடல் கேட்டு, மகிழ்ந்து நின்றதாக - ஸ்ரீகிருஷ்ண கானாம்ருத பாடல்கள் கூறுகின்றன.
பறவைகளில், கிளியையும், புறாவையும், குயிலையும் பாடும் பறவைகள் என்கிறோம்.
கவிதைக்குயில் சரோஜினி நாயுடு என்றும், இசைக்குயில் லதாமங்கேஷ்கர் என்றும் கூறுகிறோம்.
அதிக விஷமுள்ள சர்ப்பங்களான நல்ல பாம்புகள் கூட மகுடியின் நாதத்திற்கு அசைந்தாடுகின்றன.
அமைதியான, குளிர் இரவினில் - இனிமையான பாடல்கள் மனதை நெகிழ வைக்கும்.
இந்த உலகின் உயர்ந்த விஷயம் - ஆண்டவன்.  அவனுக்கு பாடல் கலந்த பூசனை!  அடுத்தது குழந்தைகள் - தாய்மார்கள் - தூங்க வைக்கப்பாடும் தாலாட்டு . . . ?
காதுக்கினிய உணர்ச்சிபூர்வமான பாடல்கள் சிந்தையைக் குளிர்விக்கும் !
-ரேவதி
Jan 19, 2015
More Music

Post Your Comments
Name*  
City  
Country  
Email*  
Comments*  
Security Code*
   
     
 
Comments
 
 
More Music
 
 
 
Photo Gallery
 
Videos

Trailer of Neethane En Ponvasantham

Trailer of 'Nanban'